/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாவரம் சந்தையில் விற்கப்படும் உணவு பொருட்களில் கலப்படம்?
/
பல்லாவரம் சந்தையில் விற்கப்படும் உணவு பொருட்களில் கலப்படம்?
பல்லாவரம் சந்தையில் விற்கப்படும் உணவு பொருட்களில் கலப்படம்?
பல்லாவரம் சந்தையில் விற்கப்படும் உணவு பொருட்களில் கலப்படம்?
ADDED : அக் 23, 2025 12:34 AM
பல்லாவரம்: பல்லாவரம் வாரச் சந்தையில் விற்கப்படும் சில உணவு பொருட்களில் கலப்படம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்லாவரம், பழைய டிரங்க் சாலையில், வாரத்தின் வெள்ளிக்கிழமைதோறும் சந்தை நடக்கிறது. 80 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இச்சந்தையில், குண்டூசி முதல் 'பிரிஜ்' வரை, வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும்.
இதை தவிர, பூச்செடிகள், காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவையும் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், இங்கு விற்கப்படும் நெய், தேன், அப்பளம் போன்ற உணவு பொருட்களில் சமீபகாலமாக கலப்படம் அதிகரித்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதை, உணவு பாதுகாப்பு அலுவலர்களும் பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதனால், செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வாரந்தோறும் சந்தையில் ஆய்வு செய்து, கலப்படம் மற்றும் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.