/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவு அப்பல்லோவில் துவக்கம்
/
மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவு அப்பல்லோவில் துவக்கம்
மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவு அப்பல்லோவில் துவக்கம்
மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவு அப்பல்லோவில் துவக்கம்
ADDED : ஆக 14, 2025 12:26 AM
சென்னை, சென்னை அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், அதிநவீன கேத் லேப் தொழில்நுட்பத்துடன் கூடிய, அவசர சிகிச்சை பிரிவை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சுவாமிநாதன், நேற்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, மருத்துவ குழும புற்றுநோயியல் மற்றும் சர்வதேச குழு இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி கூறியதாவது:
அதிநவீன கேத் லேப் வசதியுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவில், பல துல்லியமான மருத்துவ சிகிச்சையை அளிக்க முடியும். டாக்டர்களுக்கு மேம்பட்ட திறன்களை வழங்குவதுடன், நோயின் தன்மையை துல்லியமாகவும் கண்டறிய முடியும்.
இதயவியல், நரம்பியல் மற்றும் புற்றுநோயியல் பிரிவு நோயாளிகளின் சிகிச்சைகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த கேத் லேப் தொழில்நுட்பத்தில் குறைந்தபட்ச ஊடுறுவல் சிகிச்சைகளையும் அளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.