/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தங்கமயில்' ஜுவல்லரியின் 2 கிளைகள் நாளை திறப்பு
/
'தங்கமயில்' ஜுவல்லரியின் 2 கிளைகள் நாளை திறப்பு
ADDED : ஜூலை 05, 2025 12:39 AM
சென்னை,
'தங்கமயில்' ஜுவல்லரி சென்னையில் நாளை இரு புது கிளைகளை துவக்க உள்ளது.
தங்க நகை விற்பனையில், முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக 'தங்கமயில்' ஜுவல்லரி உள்ளது. தமிழகம் முழுதும் 62 கிளைகளும், 30 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது.
தற்போது, 63வது மற்றும் 64வது புதிய கிளைகளை, சென்னை ஊரப்பாக்கம் மற்றும் கவுரிவாக்கத்தில் நாளை திறக்க உள்ளது.
திறப்பு விழாவின் முக்கிய அம்சமாக, தங்கமயில் ஜுவல்லரி ஷோரூமிற்கு உள்ளேயே, தன் பிரத்தியேக 'பிரைடல் ஸ்டோர்' அறிமுகப்படுத்தி, அதில் 'தங்க மாங்கல்யம்' எனும், தனித்துவமான திருமண நகை கலெக் ஷன்களையும் அறிமுகப்படுத்துகிறது.
இதில், மணமகளுக்கு ஏற்ற தங்க, வைர ஆபரணங்கள், ரத்தினக் கற்களில் அமைந்த நகைகள், வெள்ளி நகைகள் என, மிகச் சிறந்த விலைக்கு ஒரே இடத்தில் வாங்கிடலாம்.
வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை; நியாயமான விலை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.