/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அப்பல்லோவில் அதிநவீன துல்லிய ஆய்வகம் திறப்பு
/
அப்பல்லோவில் அதிநவீன துல்லிய ஆய்வகம் திறப்பு
ADDED : மே 01, 2025 12:10 AM
சென்னை, அப்பல்லோ டயக்னாஸ்டிக்ஸ் மருத்துவமனையில், அதிநவீன துல்லிய மருத்துவ பரிசோதனை ஆய்வகத்தை, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:
இந்த அதிநவீன, 'டிஜி - ஸ்மார்ட் லேப்' முழுமையான முக துல்லிய பரிசோதனை முடிவை தருகிறது. இதன் வாயிலாக நோயாளிகளுக்கு சிறப்பாக பரிசோதனை முடிவுகள் கிடைப்பதுடன், தினமும், 10,000க்கும் மேற்பட்ட மாதிரிகளை மிக துல்லியமாக ஆய்வு செய்யவும் முடிகிறது.
அப்பல்லோ மருத்துவ குழுமம் இதுபோன்ற மிக நவீன தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ குழும துணை தலைவர் பிரீத்தா ரெட்டி பேசுகையில், ''துல்லியம், வேகம், தொழில்நுட்பம் ஆகியவை, 'டிஜி ஸ்மார்ட் லேப்' ஒன்றிணைத்து, நோயாளிகளின் சிகிச்சையில் புதிய நம்பகத்தன்மையை அளிக்கிறது,'' என்றார்.