/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விளம்பர விருப்பம் / ஜி ஸ்கொயர் 'ரீகல் பார்க் - 2' வண்டலுாரில் 393 மனைப்பிரிவு
/
விளம்பர விருப்பம் / ஜி ஸ்கொயர் 'ரீகல் பார்க் - 2' வண்டலுாரில் 393 மனைப்பிரிவு
விளம்பர விருப்பம் / ஜி ஸ்கொயர் 'ரீகல் பார்க் - 2' வண்டலுாரில் 393 மனைப்பிரிவு
விளம்பர விருப்பம் / ஜி ஸ்கொயர் 'ரீகல் பார்க் - 2' வண்டலுாரில் 393 மனைப்பிரிவு
ADDED : ஜூன் 13, 2025 09:25 PM
சென்னை:வண்டலுாரில் 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் சார்பில், ரீகல்பார்க் மனைப்பிரிவு திட்டத்தில் இரண்டாம் கட்டம் அறிமுகம் ஆகியுள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:
நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான, 'ஜி ஸ்கொயர்' நிறுவனம், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், மனைப்பிரிவு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், வண்டலுாரில் 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் ரீகல்பார்க் என்ற மனைப்பிரிவு திட்டத்தின் முதல் பகுதியை சமீபத்தில் அறிவித்தது.
இதில், 200 மனைகள் உருவாக்கப்பட்டதில், 193 மனைகள் விற்றுவிட்டன. இதையடுத்து, ஜி ஸ்கொயர் 'ரீகல்பார்க் பேஸ் - 2' என்ற திட்டத்தை அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வண்டலுாரில், 23.53 ஏக்கர் பரப்பில், 393 குடியிருப்பு மனைகளுடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், ஒரு சதுர அடி, 4,950 ரூபாய் முதல் 6,400 ரூபாய் வரையிலான விலைகளில், மனை விற்பனை செய்யப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், வண்டலுார் ரயில் நிலையம், பல்வேறு தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு அருகில் இத்திட்டம் அமைந்துள்ளது.
இது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில், ''ஜி ஸ்கொயர் ரீகல்பார்க் பேஸ் - 2 மற்றும் அமிர்தா பள்ளி துவக்கம் ஆகியவை, எங்களின் சிறந்த மைல்கல் சாதனையாகும். இத்திட்டம் நவீன உள்கட்டமைப்பு மற்றும் வாழ்கை முறையை வழங்குவதாக அமைந்து இருக்கும்,'' என்றார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.