/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க., கவுன்சிலருக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., கவுன்சிலருக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
தி.மு.க., கவுன்சிலருக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
தி.மு.க., கவுன்சிலருக்கு ஆதரவாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 15, 2024 12:49 AM
திருத்தணி, திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் ராதா, 42, அவரதுமகன் பாலசந்தர், 22. இருவரும், கடந்த 12ம் தேதி, அங்குள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கினர்.
அங்கு வந்த திருத்தணி நகராட்சி தி.மு.க., கவுன்சிலரும், வழக்கறிஞருமான அசோக்குமார், 42, என்பவர், ராதாவை மொபைல்போனில் படம் பிடித்ததாகக் கூறி, அவரது மகன் பாலசந்தர் தாக்கினார்.
பதிலுக்கு கவுன்சிலரும் பாலசந்தரை தாக்கினார். ராதா கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார், அசோக்குமார் உட்பட 25 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். ஆனால் அசோக்குமார் கொடுத்த புகாரை, போலீசார் வாங்க மறுத்தனர்.
இந்நிலையில், திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன் வழக்கறிஞர்கள், 50க்கும் மேற்பட்டோர், அசோக்குமாருக்கு ஆதரவாக, அவர் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்கும்படி, நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் அவர்களை சமாதானம் செய்ததும் கலைந்து சென்றனர்.