தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அடையாறு பத்திரப்பதிவு ஆபீஸ் நவீன வசதிகளுடன் திறப்பு

அடையாறு பத்திரப்பதிவு ஆபீஸ் நவீன வசதிகளுடன் திறப்பு

அடையாறு பத்திரப்பதிவு ஆபீஸ் நவீன வசதிகளுடன் திறப்பு


ADDED : ஜன 31, 2025 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னைஅடையாறு பத்திரப்பதிவு அலுவலகம், கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், நவீன 'ஏசி' வசதிகளுடன், திருவான்மியூர், காமராஜர் நகரில் உள்ள டி.என்.எச்.பி., அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

இங்கு, அடையாறு, கானகம், களிக்குன்றம், கோட்டூர், கொட்டிவாக்கம், பள்ளிப்பட்டு, தரமணி, வெங்கடாபுரம், ஊரூர் ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள சொத்து உள்ளிட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்படும்.

வசதிகள் என்னென்ன?


இந்நிகழ்ச்சியில், தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் ஹசன் மவுலானா, அரவிந்த் ரமேஷ், கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜகடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பத்திரப்பதிவுக்கு வரும் மக்கள் காத்திருக்கும் அறையில் 'ஏசி' வசதி உள்ளது. அங்கு, வைபை இணைய வசதி, தினசரி நாளிதழ், நுாலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான பிரத்யோக வசதிகள் உள்ளன.

மேலும், பதிவு அறையில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், ஆவணதாரர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், 10 நபர்களை அனுமதிக்கும் வகையில், மின்னணு நுழைவு அட்டை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us