/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல் உடைக்கும் ஆலைகளால் பாதிப்பு? அறிக்கை அளிக்க வக்கீல்கள் நியமனம்
/
கல் உடைக்கும் ஆலைகளால் பாதிப்பு? அறிக்கை அளிக்க வக்கீல்கள் நியமனம்
கல் உடைக்கும் ஆலைகளால் பாதிப்பு? அறிக்கை அளிக்க வக்கீல்கள் நியமனம்
கல் உடைக்கும் ஆலைகளால் பாதிப்பு? அறிக்கை அளிக்க வக்கீல்கள் நியமனம்
ADDED : நவ 12, 2024 12:25 AM
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம், எருமையூர் பகுதியில் இயங்கும், 52 கல் உடைக்கும் ஆலைகள், அரசின் அனுமதி பெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில், சம்பத் என்பவர் தாக்கல் செய்த மனு:
காஞ்சிபுரம் மாவட்டம், எருமையூர் பகுதியில், 3.5 கி.மீ., தொலைவுக்குள், 52 கல் உடைக்கும் ஆலைகள் இயங்குகின்றன. இதனால், அந்த பகுதியில் வசிப்பவர்களால், சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டுள்ளது; ஒலி மாசு ஏற்பட்டுள்ளது.
இவற்றில் சில ஆலைகள், அரசின் அனுமதி பெறாமல் இயங்குகின்றன. அந்த ஆலைகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனுவில் கூறியுள்ள புகார் குறித்து விசாரிக்க, அட்வகேட் கமிஷனர்களாக இருவரை நியமித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கல் உடைக்கும் ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அட்வகேட் கமிஷனர்கள் ஆய்வுக்கு செல்லும்போது, மாசு கட்டுப்பாட்டு அதிகாரி, வருவாய் அதிகாரி உடன் இருக்கவும் அறிவுறுத்தினர்.
விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

