/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆப்ரிக்க தம்பதியிடம் 20,000 டாலர் திருட்டு
/
ஆப்ரிக்க தம்பதியிடம் 20,000 டாலர் திருட்டு
ADDED : அக் 27, 2024 12:29 AM
சென்னை, சூளைமேடு, பெரியார் பாதையில், 'கிரீன் கிராண்ட் இன்' தங்கும் விடுதி உள்ளது. அதில் வழித்தேவன், 43, என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர், சூளைமேடு போலீசில், கடந்த 24ல் ஒரு புகார் அளித்தார்.
அதன் விபரம்:
எங்கள் விடுதியில் ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த தம்பதியும், அவருடன் வந்த மூவரும் தனித்தனியே அறை எடுத்து, இம்மாதம் 22ம் தேதி முதல் தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், 24ம் தேதி காலை 9:00 மணிக்கு வெளியே சென்ற தம்பதி, 11:00 மணிக்கு திரும்பியபோது அறையிலிருந்து அவரது பொருட்கள் கலைந்து கிடந்துள்ளன.
அவர்கள் பையில் இருந்த, அமெரிக்காவின் 20,000 டாலர் திருடுபோயுள்ளது. உரிய விசாரணை மேற்கொண்டு, டாலரை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
போலீசார் விசாரணையில் தங்கும் விடுதி ஊழியரான மெகதி உசேன், 19, என்பவர், இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை, நேற்று கைது செய்த போலீசார், 16,500 டாலரை பறிமுதல் செய்தனர்.