sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 67 ஆண்டுக்குப்பின் அரசின் ரூ.200 கோடி நிலம் மீட்பு

/

 67 ஆண்டுக்குப்பின் அரசின் ரூ.200 கோடி நிலம் மீட்பு

 67 ஆண்டுக்குப்பின் அரசின் ரூ.200 கோடி நிலம் மீட்பு

 67 ஆண்டுக்குப்பின் அரசின் ரூ.200 கோடி நிலம் மீட்பு


ADDED : ஜன 22, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நந்தனத்தில், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த, பழங்குடியினர் நலத்துறைக்கு சொந்தமான, 200 கோடி ரூபாய் மதிப்பிலான, 6.22 கிரவுண்ட் நிலம், 67 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டு உள்ளது.

சென்னை நந்தனத்தில், 6.22 கிரவுண்ட் நிலத்தின் ஒருபகுதியில், 1958 ம் ஆண்டு முதல், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி செயல்பட்டு வந்தது. தொடர்ந்து, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி துவக்கப்பட்டது.

இடத்திற்கு உரிமை கோரி, தனிநபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலம் பழங்குடியினர் நலத்துறைக்கு சொந்தமானது என, அரசு தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழக அரசின் தொடர் முயற்சியால், தனிநபர் தொடுத்த வழக்கை, 2025 நவ., 4ல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, அந்த நிலத்திற்கு பழங்குடியினர் நலத்துறை பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது. வருவாய் ஆவணங்களில் உரிய பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அந்த நிலம் பழங்குடியினர் நலத்துறைக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.

அரசின் தொடர் முயற்சியால், 67 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த நில பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு, 200 கோடி ரூபாய்.






      Dinamalar
      Follow us