/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐந்து மாதங்களுக்கு பின் ரயில்வே சாலை சுத்தம்
/
ஐந்து மாதங்களுக்கு பின் ரயில்வே சாலை சுத்தம்
ADDED : ஜன 08, 2024 01:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி:வேளச்சேரி ரயில்வே சாலை, 2 கி.மீ., நீளம், 80 அடி அகலம் உடையது. இந்த சாலை, ஒன்றரை ஆண்டுக்குமுன் முழு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த சாலையில் சீரமைப்பு பணி முறையாக நடக்கவில்லை. கடைசியாக, ஐந்து மாதங்களுக்கும் முன் சீரமைத்தனர். இதனால் வடிகால், கால்வாய்களில் குப்பை சேர்ந்து, நீரோட்டம் தடைபட்டது.
இது குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. வேளச்சேரி பகுதி நலச்சங்கங்களும் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில் நேற்று, துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியை தொடர்ந்து மேற்கொள்ள, மாநகராட்சி வசம் ரயில்வே நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்தனர்.