/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பின்றி பாழான அகத்தியர் நகர் சிறுவர் பூங்கா
/
பராமரிப்பின்றி பாழான அகத்தியர் நகர் சிறுவர் பூங்கா
பராமரிப்பின்றி பாழான அகத்தியர் நகர் சிறுவர் பூங்கா
பராமரிப்பின்றி பாழான அகத்தியர் நகர் சிறுவர் பூங்கா
ADDED : மே 15, 2025 12:27 AM

வில்லிவாக்கம், அகத்தியர் நகர் எட்டாவது தெரு 'க்யூ - பிளாக்'கில், சென்னை மாநகராட்சி சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது. இப்பகுதியில் வசிப்போர்கள், காலையும், மாலையும் விளையாட்டு திடலில், நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த விளையாட்டு திடல், முறையான பராமரிப்பின்றி செடி கொடிகள் வளர்ந்துள்ளது.
நுழைவாயிலில், குப்பை கொட்டப்பட்டு, குப்பை மேடாக மாறியது. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது.
அதன்பின் பூங்காவை சீரமைக்கும் பணிகள் துவங்கின. ஆனால் ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால் சிறுவர்கள் விளையாட முடியாமல் தவிக்கின்றனர்.
அதேபோல், விளையாட்டு உபகரணங்களை சுற்றி, அதிகளவில் குப்பை சிதறி கிடப்பதால், சீர்கேடு நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- திருமாறன்,
வில்லிவாக்கம்.