/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிராட்வேயில் போக்குவரத்து வளாகம் ரூ.566 கோடியில் அமைக்க ஒப்பந்தம்
/
பிராட்வேயில் போக்குவரத்து வளாகம் ரூ.566 கோடியில் அமைக்க ஒப்பந்தம்
பிராட்வேயில் போக்குவரத்து வளாகம் ரூ.566 கோடியில் அமைக்க ஒப்பந்தம்
பிராட்வேயில் போக்குவரத்து வளாகம் ரூ.566 கோடியில் அமைக்க ஒப்பந்தம்
ADDED : ஜூன் 05, 2025 12:31 AM

சென்னை, பிராட்வேயில் புதிய பஸ் நிலையம், வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமையும் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகத்தை, 566.59 கோடி ரூபாயில் அமைக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பிரிட்ஜ் அண்ட் ரூப் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னை பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடம் புதுப்பிப்பு, பல்வேறு வசதிகளுடன் நவீன பஸ் நிலையம், வணிக வளாகம் என ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகத்தை, 566.59 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம், இந்த பணியை, பிரிட்ஜ் அண்ட் ரூப் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்த நிகழ்வு சென்னையில் நேற்று நடந்தது. சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவன தலைவர் சித்திக் முன்னிலையில், நிறுவன இயக்குனர் அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் அண்ட் ரூப் நிறுவன பொறியியல் குழு பொது மேலாளர் சஞ்சய் பட்டாசார்யா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி, பிரிட்ஜ் அண்ட் ரூப் நிறுவனத்தின் திட்ட மேலாண்மை இயக்குனர் ரவி குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம், வர்த்தக வளாகங்களுடன் இணைந்து அமையவுள்ளது. இந்த பஸ் முனைய பணிகள், 24 மாதங்களுக்குள் முடிக்கப்படும்.
அதே நேரத்தில், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் மற்றும் குறளகம் கட்டிடம் பணிகள், 30 மாதங்களுக்குள் நிறைவடையும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.