/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நோயாளிகளுக்கு ஏ.ஐ., உதவியுடன் உணவு வி.எஸ்., மருத்துவமனையில் துவக்கம்
/
நோயாளிகளுக்கு ஏ.ஐ., உதவியுடன் உணவு வி.எஸ்., மருத்துவமனையில் துவக்கம்
நோயாளிகளுக்கு ஏ.ஐ., உதவியுடன் உணவு வி.எஸ்., மருத்துவமனையில் துவக்கம்
நோயாளிகளுக்கு ஏ.ஐ., உதவியுடன் உணவு வி.எஸ்., மருத்துவமனையில் துவக்கம்
ADDED : நவ 13, 2025 12:43 AM

சென்னை: வி.எஸ்., மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு, ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், புற்றுநோயாளிகளின் உடல்நலத்திற்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு உதவியுடன், உணவு வழங்கும் வகையில், 'ஹோப்' திட்டத்தை, நடிகை ரோகினி, மருத்துவமனை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் தலைவர் சுப்பிரமணியன், இணை இயக்குநர் நித்யா ஸ்ரீதரன் ஆகியோர் கூறியதாவது:
வி.எஸ்., மருத்துவமனை, அமெரிக்காவின், 'ட்வீட் அண்ட் ஈட்' என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதன் வாயிலாக, நோயாளிகளின் உடல்நலத்திற்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, உணவு பட்டியல் தயாரித்து வழங்க முடியும்.
குறிப்பாக, நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப, தனிப்பட்ட உணவு திட்டம் வழங்கப்படுவதுடன், அந்த உணவுகள் குறித்த ஆலோசனையும் வழங்கப்படும்.
இந்த மருத்துவ மனையில், 'மரபணு புற்றுநோய் பரிசோதனை கிளினிக்' துவங்கப்பட்டுள்ளது. இவற்றில், மரபணு ரீதியாக, ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்ப, மருந்து மாத்திரை வழங்குதல் மற்றும் துல்லியமான சிகிச்சை அளிக்கப்படும்.
மேலும், நோயாளிகளின் மரபணு, புற்றுநோய் கட்டியை ஆராய்வதன் வாயிலாக, ஒவ்வொருவருக்கும் மரபணு புற்றுநோய் வர வாய்ப்புள்ளதா என்பதை கண்டறிந்து, முன்கூட்டியே சிகிச்சை பெற முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

