sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலை போடாததால் மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதங்கம்

/

சாலை போடாததால் மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதங்கம்

சாலை போடாததால் மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதங்கம்

சாலை போடாததால் மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதங்கம்


ADDED : மே 10, 2025 12:37 AM

Google News

ADDED : மே 10, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி, 'வார்டில், சாலைகள் போடாத காரணத்தால், மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை' என, அ.தி.மு.க., கவுன்சிலர் ஆதங்கம் தெரிவித்தார்.

மணலி மண்டல குழு கூட்டம், நேற்று மாலை, மண்டல குழு தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் தேவேந்திரன் உட்பட பல துறைகளைச் சேர்ந்த அ.திகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், 21 வது வார்டில், 2.15 கோடி ரூபாய் செலவில், நகர்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டும் பணி, 5.20 கோடி ரூபாய் செலவில், மண்டலம் முழுதும் இருக்கும் சுடுகாடு மற்றும் இடுகாடுகளை மேம்படுத்தும் பணி உட்பட, 116 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வார்டின் அடிப்படை பிரச்னைகள் குறித்து, கவுன்சிலர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.

____________

ராஜேந்திரன் 16வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்

தெருவிளக்கு கம்பங்கள் அடிபாகம் துருபிடித்து எந்நேரம் வேண்டுமானாலும் மண்ணை கவ்வும் நிலையில் உள்ளது. சடையங்குப்பம் பகுதியில் குடிநீர் பற்றாக் குறை நிலவி வருகிறது. தொட்டிகளில் குடிநீர் நிரப்ப வேண்டும். வடிவுடையம்மன் நகர் தண்ணீர் தொட்டியின் அடிபாகம் சேதமடைந்துள்ளது. ஆர்.எல்., நகரில், மின்மாற்றி வைத்துள்ளனர். ஆனால், சேதமான மின்கம்பங்கள் சீரமைக்கவில்லை.

___________

நந்தினி 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்

பூங்காக்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. காவலாளி கிடையாது. அவருக்கான சம்பளத்தை ஒப்பந்தாரர் என்ன செய்கிறார். பூங்கா முழுவதும் குப்பையாக உள்ளது. சுத்தம் செய்ய பாப்கட் இயந்திரம் கேட்டும் தரவில்லை. மெட்ரோ வாட்டர் பணிக்காக பள்ளம் தோண்டி அப்படியே விட்டுள்ளனர். எந்தவொரு தடுப்பும் இல்லாததால், விபத்து அச்சம் நிலவி வருகிறது. அதிகாரிகள் யாரும் மீட்டிங் வரவில்லை.

__________

ஜெய்சங்கர் 17வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்

வடபெரும்பாக்கம், ஆரம்ப பள்ளி கட்டடம் இடியும் தருவாயில் உள்ளது. தீயம்பாக்கம், செட்டிமேடு கழிப்பறை சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும். பெரியார் நகர் மற்றும் அரியலுாரில் புதிய கழிப்பறை வேண்டும். கொசப்பூர் - 2 ல்,சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். குடிநீர் வினியோகம் தட்டுபாடு உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். தெருவிளக்கு கம்பங்கள் துருபிடித்துள்ளது மாற்ற வேண்டும். வெளி குப்பையை வார்டில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும்.

___________

ஸ்ரீதரன், 18வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்

தீர்மானங்களின் எண்ணிக்கை கூடுகிறது ; வேலை ஏதும் நடக்கவில்லை. சபாபதி குளம் சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றி, மூன்று ஆண்டுகளாகியும், பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கிராம சபை கூட்டம் கூட்ட சொல்லும் அதிகாரிகள், கூட்டத்திற்கு வருவதில்லை. வேலையும் நடப்பதில்லை.

எழுத்தோடு போகிறது ; செயல்பாட்டிற்கு வருவதில்லை. சாலை பிரச்னை என்று தான் தீரும். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. 18 வது வார்டு பின்தங்கியுள்ளது. சம்பிரதாயத்திற்கு எதற்கு கூட்டம்.

__________

ஏ.வி. ஆறுமுகம், தி.மு.க., மண்டல குழு தலைவர், மணலி

பல்வேறு துறைகள், சாலைகளில் பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தந்த துறை, பணிகள் முடிந்ததும், தடையின்மை சான்று வழங்கிய பின்பே, சாலை போட முடியும். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் கூட முடிக்கப்பட்டன. மண்டலம் முழுதும், பல கோடி ரூபாய் திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் முன்மாதிரியாக, மணலி மண்டலம் திகழ்கிறது.






      Dinamalar
      Follow us