/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காரில் மதுபாட்டில் கடத்திய அ.தி.மு.க., பிரமுகர் கைது
/
காரில் மதுபாட்டில் கடத்திய அ.தி.மு.க., பிரமுகர் கைது
காரில் மதுபாட்டில் கடத்திய அ.தி.மு.க., பிரமுகர் கைது
காரில் மதுபாட்டில் கடத்திய அ.தி.மு.க., பிரமுகர் கைது
ADDED : ஏப் 09, 2025 12:17 AM
சென்னை,
கோபாலபுரம், எஸ்.பி.ஐ., வங்கி அருகே, நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த, மாருதி ஷிப்ட் காரை மடக்கி, சோதனை செய்தனர். அதில், 96 குவாட்டர் மதுபாட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது.
பின் கார் ஒட்டுனரை, ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில், அ.தி.மு.க., இளைஞர் இளம்பெண்கள் பாசறை, 118 வது வாட்ட செயலர் சூரியா, 18 என்பவர், காரில் மது பாட்டில் கடத்தியது தெரியவந்தது. இவர், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் எதிரே உள்ள டாஸ்மாக் கடையில், மொத்தமாக மதுபாட்டில்கள் வாங்கி, ஐஸ்ஹவுஸ் சுற்று வட்டாரப்பகுதியில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், 90 மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.