/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகுமார் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து செய்ய மறுப்பு
/
அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகுமார் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து செய்ய மறுப்பு
அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகுமார் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து செய்ய மறுப்பு
அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகுமார் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து செய்ய மறுப்பு
ADDED : ஏப் 27, 2025 02:20 AM
சென்னை:உள்ளாட்சி தேர்தலின்போது, கள்ள ஓட்டு போட முயன்ற தி.மு.க., பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டோருக்கு எதிராக, தண்டையார்பேட்டை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2022, பிப்., 19ல், இந்த சம்பவம் நடந்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயகுமார் தரப்பில், 'தாக்கியதாக கூறப்படும் தி.மு.க., உறுப்பினர் மீது, ஏற்கனவே 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை ஆயுதங்கள் கொண்டு யாரும் தாக்கவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது' என வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், 'விசாரணையில் மனுதாரர், அவரது ஆதரவாளர்கள் ஆயுதங்களை கொண்டு தாக்கியது உறுதி செய்யப்பட்டது. எனவே, மனுதாரர் உட்பட 20 பேருக்கு எதிராக, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி, ''கடுமையான பிரிவுளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசார் ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளனர். எனவே, கீழமை நீதிமன்ற விசாரணையில் தான் சம்பவம் குறித்து முழுமையாக தெரியவரும் என்பதால், கொலை முயற்சி வழக்கை ரத்த செய்ய முடியாது,'' என்றார்.
இதையடுத்து, 'வழக்கை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்' என, ஜெயக்குமார் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கை திரும்ப பெற அனுமதித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.