/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இந்திய ராணுவ வீரர்களுக்காக அ.தி.மு.க.,வினர் பிரார்த்தனை
/
இந்திய ராணுவ வீரர்களுக்காக அ.தி.மு.க.,வினர் பிரார்த்தனை
இந்திய ராணுவ வீரர்களுக்காக அ.தி.மு.க.,வினர் பிரார்த்தனை
இந்திய ராணுவ வீரர்களுக்காக அ.தி.மு.க.,வினர் பிரார்த்தனை
ADDED : மே 11, 2025 12:37 AM
நங்கநல்லுார், அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியின் பிறந்தநாள், கட்சியினரால் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, நாட்டு மக்கள் நலனிற்காக, எல்லையில் போர் புரியும் ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்கவும், பாக்., நடத்தும் தாக்குதலை முறியடித்து வெற்றி பெறவும், ஆலந்துார் பகுதி அ.தி.மு.க., சார்பில் கோவில், சர்ச், மசூதிகளில சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
நங்கநல்லுார், ஆதிவியாதிஹர பக்த ஆஞ்சநேயருக்கு அ.தி.மு.க., ஆலந்துார் கிழக்கு பகுதி கழக செயலர் பரணிபிரசாத் ஏற்பாடில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, சென்னை புறநகர் மாவட்டக் கழக செயலர் கந்தன் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலர் சிங்காரம், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அடுத்து இரண்டு நாட்கள் கோவில், சர்ச், மற்றும் மசூதிகளில் தொடர்ந்து பிரார்த்தனை நடத்தப்படும் என, கட்சியினர் தெரிவித்தனர்.