/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம் சட்டசபையில் அ.தி.மு.க., எதிரொலிக்கும்
/
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம் சட்டசபையில் அ.தி.மு.க., எதிரொலிக்கும்
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம் சட்டசபையில் அ.தி.மு.க., எதிரொலிக்கும்
எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம் சட்டசபையில் அ.தி.மு.க., எதிரொலிக்கும்
ADDED : செப் 28, 2025 02:51 AM

பிராட்வே:'பணி நிரந்தரம், மருத்துவ காப்பீட்டிற்கான முன்பணம் வழங்கக்கோரி எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் நடத்திவரும் போராட்டம், சட்டசபையில் எதிரொலிக்கும்,'' என, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் பேசினார்.
திருவொற்றியூர், எம்.ஆர்.எப்., டயர் உற்பத்தி தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு காப்பீட்டு தொகைக்கான முன்பணம் வழங்காதது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 17வது நாளாக நேற்று, 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து எம்.ஆர்.எப்., தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சிவப்பிரகாசம் கூறியதாவது:
கடந்த 2007ல், 'போனஸ்' தொகை தரவில்லை எனக்கூறி, எம்.ஆர்.எப்., தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து நிர்வாகத் திற்கும், தொழிலாளர்களும் இடையே கடும் பிரச்னை ஏற்பட்டதால், எம்.ஆர்.எப்., தொழிற்சாலை மூடினர். இதுகுறித்த சட்ட சபையில் எம்.எல்.ஏ., வேல்முருகனின் பேச்சு கவனம் பெற்றது.
இதையடுத்து முதல்வர் கருணாநிதி மூன்று நாள்களுக்குள், எம்.ஆர்.எப்., தொழிற்சாலை திறக்க வேண்டும்.
இல்லையென்றால் எம்.ஆர்.எப்., தொழிற்சாலையை அரசே நடத்தும் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன்பின், தொழிற்சாலை திறக்கப்பட்டது.
இதேபோல், இந்த முறையும் சட்டசபை கவனத்திற்கு எடுத்து செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் பேசுகையில், ''முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் என யாரும், தொழிலாளர்கள் பிரச்னையில் தலையிடவில்லை.
''இந்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியிடம், இந்த விவகாரம் எடுத்து சொல்லப்பட்டு, சட்டசபையில் குரல் கொடுக்கப்படும்,'' என்றார்.
எம்.ஆர்.எப்., நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர், இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, தீர்வு காண வேண்டும். எம்.ஆர்.எப்., நிறுவனம் மீண்டும் இயல்பாக செயல்பட, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்.