sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விமான படை சாகச நிகழ்ச்சி / பொதுமக்கள் பேட்டி

/

விமான படை சாகச நிகழ்ச்சி / பொதுமக்கள் பேட்டி

விமான படை சாகச நிகழ்ச்சி / பொதுமக்கள் பேட்டி

விமான படை சாகச நிகழ்ச்சி / பொதுமக்கள் பேட்டி


ADDED : அக் 07, 2024 01:41 AM

Google News

ADDED : அக் 07, 2024 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விமான சாகசத்தில் ரபேல், சூகோய், தேஜஸ் உள்ளிட்ட இந்திய விமான படையின் முன்னணி போர் விமானங்கள் பங்கேற்றது மகிழ்ச்சி. 'ஆகாஷ் கங்கா' குழுவினரின் 'ஸ்கை டைவிங்' அழகாக இருந்தது.

விமானங்கள் வானில் வட்டமிட்டும், செங்குத்தாக பறந்தும், இந்திய தேசியக்கொடி நிறத்தை புகை வாயிலாக காண்பித்த சாகசங்கள் பிரமிக்க வைத்தன. இந்த சாகச நிகழ்ச்சியை பார்த்த சிறுவர் -- சிறுமியர், இளைஞர்கள், விமான படையில் சேர ஆர்வம் கொள்வர்.

எதிர்காலத்தில் அதிக அளவிலான விமான படை சாகச நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

- வி.விமல்குமார், 48, கோயம்பேடு.

'மாலையில் நடத்தி இருக்கலாம்'

பெற்றோர் அதிக அளவில் குழந்தைகளை விமான சாகச நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க வேண்டுமென ஆசையுடன் அழைத்து வந்துள்ளனர். ஆனால், முற்பகல் 11:00 மணியில் இருந்து 1:00 மணி வரை நடந்த நிகழ்ச்சியில், மக்களால் வெயில் தாக்கத்தை தாங்க முடியவில்லை. பலர் பாதியில் திரும்பிச் சென்றனர். இந்த நிகழ்வை காலை 7:00 மணி அல்லது மாலை 3:00 மணியளவில் வைத்திருந்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பித்து, சாகச நிகழ்வை ரசித்திருப்பர்.

- எஸ்.சரவணன், 34; ஆவடி.

இரண்டு மணி நேரம் நடந்த விமானப்படையின் சாகசங்களை, நேரில் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது. கடைசி 10 நிமிடங்கள் வியப்பாக இருந்தது. இந்த விமான படை சாகச நிகழ்ச்சி புதிய வரலாற்றை படைத்தது.



-- எம்.ஹர்மான், 15,

அண்ணா சாலை



கடந்த 21 ஆண்டுகளுக்கு பின், சென்னையில் பிரமாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியை, குடும்பத்தினருடன் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வானில் குட்டிக்கரணம் அடித்தும், விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்தும் சாகசம் செய்தது மெய்சிலிர்க்க வைத்தது. மெரினாவில் பல லட்சம் பேர் குவிந்தது வியக்க வைக்கிறது.

நான் செங்குன்றத்தில் இருந்து வந்துள்ளேன். எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கினேன். தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுத்து, பொது போக்குவரத்தான பேருந்து, ரயில்களை கூடுதலாக இயக்கி இருந்தால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

- ஆர்.லோகபிரபு, 37,

செங்குன்றம்.



'6 கி.மீ., நடந்து வந்தேன்'


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிpf, மெரினாவில் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கிறேன். வேலுார், ராணிப்பேட்டையில் இருந்து ரயிலில் சென்ட்ரல் வந்து, அங்கிருந்து 6 கி.மீ., நடந்து மெரினா கடற்கரை வந்தேன்.

கடும் போக்குவரத்து நெரிசலால், பல மணி நேரம் வாகனங்கள் சாலைகளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயில் நிலையங்களில் பயணியரை கட்டுப்படுத்த ஏற்பாடுகள் இல்லாத நிலை காணப்பட்டது.

- எஸ்.பொற்கொடி, 28, ராணிப்பேட்டை

துாரத்தில் இருந்து தான் பார்க்க முடிந்தது


இரண்டு கிலோ மீட்டர் துாரம் வரை நடந்து சென்று, மெரினா கடற்கரையை சென்றடைந்தோம். ஆனால், கடற்கரைக்குள் எங்களால் போக முடியவில்லை; தடுத்து விட்டனர். இதனால், சென்னை பல்கலையில் இருந்து தான், நம் நாட்டின் விமானப் படைவீர்கள் விண்ணில் நிகழ்த்திய சாகசத்தை காண முடிந்தது. அருகில் சென்று பார்க்க முடியவில்லை என்பது சிறிய வருத்தமே. இதய வடிவ சாகச நிகழ்ச்சி உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் இருந்தது.

- சந்திரலேகா,

இல்லத்தரசி.

பூந்தமல்லி

மெட்ரோ ரயில் ஏற்பாடு சரியில்லை


விமான சாகச நிகழ்ச்சிக்கான பொது போக்குவரத்து ஏற்பாடுகள் இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம். கூட்ட நெரிசலில் மெட்ரோ ரயில் நிலையம் ஸ்தம்பித்து விட்டது. மெட்ரோ ரயில் நிலையத்தில், கூட்டத்தில் சிக்கி சிலர் மயங்கி விழுந்து விட்டனர். குழந்தைகள், முதியோர் பெரும்பாடுபட்டனர். பல லட்சம் பேர் பயணம் செய்தால் எப்படி கையாள வேண்டும் என்பதை, விமான சாகச நிகழ்ச்சியில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாடம் கற்க வேண்டும்.

- ராகுல்.

தனியார் நிறுவன ஊழியர்,

திருவொற்றியூர்.

விமான சாகச நிகழ்ச்சி குறித்து, இன்ஸ்டாகிராம் மீம்ஸ்களை பார்த்து மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அது வீண் போகவில்லை. கடல் போல மக்கள் கூட்டம். வானில் விதவிதமான விமான படையினரின் சாகசம் மெய் சிலிர்க்க வைத்தது. நம் நாட்டு தேசியக் கொடி போன்ற பாராசூட்டில் வீரர்கள் பறந்து வந்தது மிகவும் அற்புதமான காட்சி. சாகச நிகழ்ச்சி துாள். ஆனால், மெரினாவில் இருந்து, சென்ட்ரல் மெட்ரோ வரை பஸ் போக்குவரத்து இல்லாமல் நடந்ததே வந்தது தான் கொடுமை.

- கீர்த்தனா,

இன்ஜியிரிங் மாணவி

வண்ணாரப்பேட்டை






      Dinamalar
      Follow us