/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் கோளாறு
/
ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் கோளாறு
ADDED : ஏப் 22, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னையில் இருந்து டில்லி செல்லும் ஏர் இந்தியா விமானம், நேற்று அதிகாலை 5:55 மணிக்கு, 155 பேருடன் புறப்பட தயாரானது.
விமானம் ரன்வேயில் ஒடத்துவங்கும்முன், இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பயணியர் அனைவரும் விமானத்திற்குள் பத்திரமாக அமர வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழு, விமானத்தில் எதனால் கோளாறு ஏற்பட்டது என்பதை ஆராய்ந்தனர்.
விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. சரியாக ஒரு மணி நேரம் கழித்து, பிரச்னை சரி செய்யப்பட்டு, காலை 7: 00 மணிக்கு, விமானம் டில்லி புறப்பட்டது.