/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர் - இந்தியா விமானங்கள் 'மக்கர்' டில்லி, சிங்கப்பூர் பயணியர் அவதி
/
ஏர் - இந்தியா விமானங்கள் 'மக்கர்' டில்லி, சிங்கப்பூர் பயணியர் அவதி
ஏர் - இந்தியா விமானங்கள் 'மக்கர்' டில்லி, சிங்கப்பூர் பயணியர் அவதி
ஏர் - இந்தியா விமானங்கள் 'மக்கர்' டில்லி, சிங்கப்பூர் பயணியர் அவதி
ADDED : ஏப் 16, 2025 12:14 AM

சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து டில்லி செல்லும் 'ஏர் - இந்தியா' விமானம், நேற்று முற்பகல் 11:20 மணிக்கு 175 பயணியருடன் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தை இயக்குவதற்கு முன், ஏதேனும் பிரச்னை உள்ளதா என, விமானி சரிபார்த்தார். இதில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, பயணியர் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு, ஓய்வறை பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். விமான கோளாறை சரி செய்ய ஐந்து மணி நேரமாகும் என்பதால், மாலை 4:00 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை கேட்டு ஆத்திரமடைந்த பயணியர், விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
* அதேபோல, சிங்கப்பூரில் இருந்து காலை 10:30 மணிக்கு சென்னை வந்தடையும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க, 185 பேர் காத்திருந்தனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட தயாரான போது, இயந்திர கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காலையில் வர வேண்டிய விமானம் மாலை 5:30 மணிக்கு சென்னை வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த விமானங்களில் பயணிக்க காத்திருந்த நுாற்றுக்கணக்கான பயணியர் தவித்தனர்.
பயணியரை கையாள்வதில் தொடர்ந்து அலட்சியமாக 'ஏர் இந்தியா' நிறுவனம் செயல்பட்டு வருவதாக, பயணியர் குற்றஞ்சாட்டினர்.
★★★