/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை - திருச்சி விமான சேவை ' ஏர் இந்தியா ' நிறுத்தம்
/
சென்னை - திருச்சி விமான சேவை ' ஏர் இந்தியா ' நிறுத்தம்
சென்னை - திருச்சி விமான சேவை ' ஏர் இந்தியா ' நிறுத்தம்
சென்னை - திருச்சி விமான சேவை ' ஏர் இந்தியா ' நிறுத்தம்
ADDED : ஆக 19, 2025 12:50 AM
சென்னை, திருச்சியில் இருந்து சென்னைக்கு, 'ஏர் இந்தியா' நிறுவனம் சார்பில் இயக்கப்படும் விமான சேவைகளை, அந்நிறுவனம் நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்கு, 'ஏர் இந்தியா' நிறுவனம், தினசரி விமான சேவைகளை இயக்கி வருகிறது. பயணியர் வருகை அதிகம் என்பதால், இந்த மார்க்கத்தில் விமானங்களின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிடும்.
வரும் செப்., 1ம் தேதி முதல், சென்னை - திருச்சி இடையேயான விமான சேவையை, ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான இயக்க காரணங்கள் மற்றும் கூடுதல் வழித்தடங்களை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக, இந்த சேவை நிறுத்தப்படுவதாக, விமான போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், அடுத்த சில மாதங்களில் மீண்டும் சேவை துவங்கலாம் எனவும் கூறப்படுகிறது.