ADDED : ஜூலை 10, 2026 12:51 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
திருச்சி, துாத்துக்குடி, கண்ணுார், ஷீரடி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 10 விமானங்கள், தரை இறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன.
வானிலை ஓரளவு சீரடைந்து, சூறைக்காற்று இடி மின்னல் ஓய்ந்த பின், விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றா க தரையிறங்கின.
சென்னையில் இருந்து டில்லி, மைசூ ர், பெ ங்களூரு, கொல்கட்டா, துாத்துக்குடி, கோவை, ஹைதராபாத், விஜயவாடா உள்ளிட்ட 10 விமானங்கள், 40 நிமி டங்களுக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றன.
