தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஏர்போர்ட் 'டிஜி யாத்ரா' சேவையில் மீண்டும் சிக்கல்

ஏர்போர்ட் 'டிஜி யாத்ரா' சேவையில் மீண்டும் சிக்கல்

ஏர்போர்ட் 'டிஜி யாத்ரா' சேவையில் மீண்டும் சிக்கல்


ADDED : ஏப் 08, 2025 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 11:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை பயணியர் விமான நிலைய புறப்பாடு நுழைவு வாயிலில், அரசு அடையாள ஆவணங்களை, சி.ஐ.எஸ்.எப்., வீரர்களிடம் காண்பித்து செல்ல வேண்டும். சில சமயம் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் உருவாவதால், 'போர்டிங் பாஸ்' பெற நேரம் ஆகும்.

எனவே, பயணியர் எளிமையாக உள்ளே செல்ல, 'டிஜி யாத்ரா' செயலி வாயிலாக, முக அடையாளத்தை காண்பித்து செல்லும் திட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலையத்திலும் இந்த வசதி நடைமுறையில் உள்ளது.

ஆனால், சென்னை விமான நிலைய, ' டி 1' முனையத்தில், இந்த சேவையை அடிக்கடி பயன்படுத்த முடியாமல் போவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, பயணி ஒருவர் கூறியதாவது:

பெங்களூரு செல்வதற்காக சென்னை விமான நிலைய, 'டி1' முனையத்திற்கு நேற்று முன்தினம் சென்றேன். மொபைல் போனில், டிஜியாத்ரா செயலி ஏற்கனவே பதிவிறக்கம் செய்து விட்டு, பயண விபரங்கள் அனைத்தையும் உள்ளிட்டு விட்டேன்.

நுழைவு வாயில் உள்ள டிஜியாத்ரா ஸ்கேனரில் காண்பிக்க சென்றபோது. அவை பயன்பாட்டில் இல்லை. மாறாக, பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேறு வழியின்றி, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம், ஆதார் கார்டை காண்பித்து உள்ளே சென்றேன். பயணியர் பாதிக்காத வகையில், அதிகாரிகள் சேவை வழங்க வேண்டும். அடிக்கடி இது போன்ற பிரச்சனைகள் உருவாவது ஏற்புடையதல்ல.

இவ்வாறு அவர் கூறினர்.

★★★

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us