/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட் பெண் பயணியிடம் 68 'சிம் கார்டுகள்' பறிமுதல்
/
ஏர்போர்ட் பெண் பயணியிடம் 68 'சிம் கார்டுகள்' பறிமுதல்
ஏர்போர்ட் பெண் பயணியிடம் 68 'சிம் கார்டுகள்' பறிமுதல்
ஏர்போர்ட் பெண் பயணியிடம் 68 'சிம் கார்டுகள்' பறிமுதல்
ADDED : பிப் 23, 2024 12:07 AM
சென்னை,சென்னையில் இருந்து விமானத்தில் துபாய் செல்ல வந்த, பெண் பயணியிடம் இருந்து, 68 'சிம் கார்டு'களை, சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும், 'ப்ளை' விமானத்தில் செல்ல இருந்த பயணியரின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் பரிசோதித்தனர்.
அப்போது, ஆந்திர மாநிலம் சித்துாரைச் சேர்ந்த ரோஜா 40, என்ற பெண், சுற்றுலா பயணியர் விசாவில், துபாய் சொல்வதற்காக வந்தார்.
அவரை சந்தேகித்து விசாரித்தனர். அவருடைய கைப்பையை சோதித்த போது, அதில் 68 சிம்கார்டுகள் இருந்தன. அனைத்தும், ஒரே ஏர்டெல் நிறுவன சிம் கார்டுகள். இவை செயல்படுத்தப்படாமல், புதிதாக இருந்தன.
'விமான நிலையத்தில் நின்றிருந்த போது, ஒருவர் வந்து இந்த பார்சலை கொடுத்தார். இந்த பார்சலில் மருந்து பொருட்கள் இருக்கிறது துபாய் விமான நிலையத்தில், ஒரு பெண் பார்சலை வாங்கிக் கொள்வார்' என, பெண் பயணி தெரிவித்தார்.
'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த பெண் கூறியபடி யாரும் அவரிடம் பார்சலை கொடுத்தது போல் காட்சி பதிவாகவில்லை.
பின்னர், பயணி ரோஜாவின், துபாய் பயணத்தை ரத்து செய்து, அவர் வைத்திருந்த 68 சிம் கார்டுகளையும் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், அந்த பெண்ணை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.