விமான நிலைய முனையம் மேம்பாட்டு பணியால் வாகன போக்குவரத்து மாற்றம்
விமான நிலைய முனையம் மேம்பாட்டு பணியால் வாகன போக்குவரத்து மாற்றம்
ADDED : மார் 17, 2026 05:32 AM

சென்னை: முனையம் மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை விமான நிலையத்தில், தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில், 'டி3' இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நடப்பாண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, ராட்சத இரும்பு துாண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணி காரணமாக 'டி4' முனையத்தின் அருகே தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
தாம்பரத்தில் இருந்து விமான நிலைய டோல்கேட்டிற்கு வந்து, முனையத்திற்குள் இனி உள்நுழைய முடியாது.
மாறாக, தாம்பரம் பகுதி யில் இருந்து விமான நிலை யத்திற்குள் வரும் கார்கள் ஜி.எஸ்.டி., அணுகு சாலையை பயன்படுத்தி, 'டெர்மினல் 2' மற்றும் டோல்கேட் வழியாக விமான நிலையத்திற்குள் செல்ல வேண்டும்.
அங்கிருந்து வெளியே செல்லும் வாகனங்கள் 'டி4' வழியாக வெளி யேறலாம். டெர்மினல் 1, டெர்மினல் 2, வழியாக வரும் வாகனங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.
டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 4 இடையே, பயணியர் வசதிக்காக இயக்கப்படும் பேட்டரி வாகன சேவை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணியர், 'வாக்கலேட்டர்' வழியாக நடந்து செல்லலாம். இந்த நடைமுறை ஏப்., 24ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
