/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநில பளு துாக்குதல் போட்டி ஐஸ்வர்யா, கீர்த்திகா முதலிடம்
/
மாநில பளு துாக்குதல் போட்டி ஐஸ்வர்யா, கீர்த்திகா முதலிடம்
மாநில பளு துாக்குதல் போட்டி ஐஸ்வர்யா, கீர்த்திகா முதலிடம்
மாநில பளு துாக்குதல் போட்டி ஐஸ்வர்யா, கீர்த்திகா முதலிடம்
ADDED : அக் 05, 2025 12:09 AM

சென்னை, சென்னையில் நடந்து வரும் முதல்வர் கோப்பைக்கான மாநில பளு துாக்குதல் போட்டியில், ஐஸ்வர்யா, கீர்த்திகா ஆகியோர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், தமிழகம் முழுதும் நடந்து வருகின்றன. இதன் மாவட்ட மற்றும் மண்டல போட்டிகள் முடிந்து, மாநில போட்டிகள் சென்னை, மதுரை, கோவை உட்பட, 13 மாவட்டங்களில் நடந்து வருகின்றன.
சென்னை பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில், பள்ளி மாணவியருக்கான மாநில பளு துாக்குதல் போட்டி, நேற்று முன்தினம் நடந்தது. போட்டி, 44 மற்றும் 48 கிலோ என, இரண்டு பிரிவாக நடந்தது.
இதன் 44 கிலோ பிரிவில் போட்டியிட்ட வேலுாரை சேர்ந்த ஐஸ்வர்யா, 'ஸ்னாட்ச்' சுற்றில், 57 கிலோ மற்றும் 'கிளீன் அண்டு ஜெர்க்' சுற்றில் 68 கிலோ என, மொத்தம் 125 கிலோ துாக்கி, தங்கப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து, ராமநாதபுரத்தின் வைஷ்னவி 110 கிலோ, ராணிப்பேட்டையின் கனிமொழி 101 கிலோ துாக்கி, முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர்.
அடுத்து நடந்த 48 கிலோ பிரிவு போட்டியில், ராமநாதபுரத்தின் கீர்த்திகா, 'ஸ்னாட்ச்' சுற்றில் 41 கிலோ, 'கிளீன் அண்டு ஜெர்க்' சுற்றில் 53 கிலோ என, மொத்தம் 94 கிலோ துாக்கி, தங்கப் பதக்கம் வென்றார்.
கன்னியாகுமரியின் மீனா 93 கிலோ துாக்கி வெள்ளி பதக்கத்தையும், ஈரோட்டின் ஹேமாஸ்ரீ 88 கிலோ துாக்கி வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.