/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச செஸ் போட்டி அஜேஷ் முன்னிலை
/
சர்வதேச செஸ் போட்டி அஜேஷ் முன்னிலை
ADDED : டிச 09, 2024 02:59 AM

சென்னை:தமிழ்நாடு சதுரங்க கூட்டமைப்பு ஆதரவுடன், செங்கல்பட்டு சதுரங்க கூட்டமைப்பு வழிகாட்டலில், மவுண்ட் செஸ் அகடாமி மற்றும் சீயோன் ஆல்வின் பள்ளிக் குழுமம் சார்பில், சர்வதேச செஸ் போட்டிகள், இம்மாதம் 5ம் தேதி துவங்கின.
செங்கல்பட்டு மாவட்டம், மப்பேட்டில் உள்ள சீயோன் பள்ளி வளாகத்தில், போட்டிகள் நடக்கின்றன.
இதில், 8, 10, 12, 14, 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பிரிவு மற்றும் வெட்ரன்ஸ் ஆகிய பிரிவில், தினமும் இரு சுற்றுகளாக போட்டிகள் நடக்கின்றன.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், 16 வயது பிரிவில், அஜேஷ் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆறாம் சுற்று ஆட்டத்தில் எதிர் போட்டியாளர் ஹரி கணேசை, 60வது நகர்த்தலில் அஜேஷ் வென்றார்.
இப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு, மொத்த பரிசு தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.