ADDED : மே 20, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மயிலாப்பூர் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், நேற்று காலை பிடாரியம்மன் கோவில் தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒருவர் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த அப்துல்லா, 36, என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், 40 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அப்துல்லா மயிலாப்பூர் காவல் நிலைய பழைய குற்றவாளி என்பதும், ஒன்பது கொலை முயற்சி, வழிப்பறி உட்பட, 29 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.