/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய பீச் வாலிபால் எஸ்.ஆர்.எம்., பல்கலை அபாரம்
/
அகில இந்திய பீச் வாலிபால் எஸ்.ஆர்.எம்., பல்கலை அபாரம்
அகில இந்திய பீச் வாலிபால் எஸ்.ஆர்.எம்., பல்கலை அபாரம்
அகில இந்திய பீச் வாலிபால் எஸ்.ஆர்.எம்., பல்கலை அபாரம்
ADDED : ஜன 18, 2025 12:46 AM

சென்னை,
பல்கலைகளுக்கு இடையேயான அகில இந்திய பீச் வாலிபால் போட்டியில், முதல் நாளில், இருபாலரிலும், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி முதல் வெற்றியை பதிவு செய்தன.
அகில இந்திய பல்கலைகள் கூட்டமைப்பு, சென்னையில் உள்ள அமெட், எஸ்.ஆர்.எம்., பல்கலைகள் இணைந்து, அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான தேசிய அளவிலான பீச் விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின.
போட்டிகள், கோவளம் கடற்கரையில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் திடலில் மூன்று நாட்கள் நடக்கிறது. நேற்று காலை துவங்கிய, இருபாலருக்கான அகில இந்திய பீச் வாலிபால் போட்டியில், 68 பல்கலைகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள், 'நாக் - அவுட்' மற்றும் லீக் முறையில் நடக்கின்றன.
ஆண்களுக்கான ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, 21 - 7, 21 - 11 என்ற கணக்கில், கர்நாடகாவின் ராவா பல்கலையையும், வி.ஐ.டி., பல்கலை, 21 - 6, 21 - 11 என்ற கணக்கில், புனே பாரதி வித்யாபீடம் பல்கலையையும், கோவா பல்கலை, 21 - 6, 21 - 11 என்ற கணக்கில் ஒடிசாவின் கே.ஐ.ஐ.டி., பல்கலையையும் வீழ்த்தின.
பெண்களுக்கான ஆட்டத்தில், எஸ்.ஆர்.எம்., பல்கலை, 21 - 14, 21 - 5 என்ற கணக்கில், கர்நாடகாவின் அகமாதேவி பல்கலையை தோற்கடித்தது.
மற்ற ஆட்டங்களில், புதுச்சேரி பல்கலை, 21 - 17, 21 - 13 என்ற கணக்கில் சென்னை பல்கலையையும், பஞ்சாப் எல்.பி., பல்கலை, 21 - 10, 21 - 17 என்ற கணக்கில் பஞ்சாப் பல்கலையையும் வீழ்த்தி வெற்றி பெற்றன. போட்டிகள் தொடர்கின்றன.
நேற்று மாலை முதல், நாட்டில் முதல் முறையாக பீச் 'ரெஸ்லிங்' என்ற மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியும் துவங்கின. போட்டியில், பல்வேறு பல்கலைகளில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.