/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய டென்னிஸ் போட்டி காலிறுதியில் வீரர்கள் பலப்பரீட்சை
/
அகில இந்திய டென்னிஸ் போட்டி காலிறுதியில் வீரர்கள் பலப்பரீட்சை
அகில இந்திய டென்னிஸ் போட்டி காலிறுதியில் வீரர்கள் பலப்பரீட்சை
அகில இந்திய டென்னிஸ் போட்டி காலிறுதியில் வீரர்கள் பலப்பரீட்சை
ADDED : ஜூன் 15, 2025 08:20 PM
சென்னை:அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஆதரவுடன் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான, அகில இந்திய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், தமிழகத்தில் நடந்து வருகின்றன.
கரூர், நாகர்கோவில், மதுரை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் நடந்து வரும் இப்போட்டிகளில், நாடு முழுதும் 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட இளம்வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
போட்டிகள், 'லீக்' மற்றும் 'நாக் - அவுட்' முறையில் நடக்கின்றன. பங்கேற்றுள்ள வீரர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வீரர்கள், அடுத்தடுத்த சுற்றுக்கு தேர்வாகினர்.
இந்த நிலையில், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தேர்வான 16 வீரர்கள் இடையேயான போட்டிகள், சேலம், நரேன் டென்னிஸ் அரங்கில், நேற்று நடந்தது.
இதில், இந்திய அளவில் மூன்றாம் நிலை வீரரான இந்திரா பிரதீவை 6 - -2, 6 - -3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, ஆதித் ஆதவன் காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில், கனிஷ் ராஜா, -சித்தார்த் ராஜா, ஸ்ரீ சுகுந்த், ஆதித்யா, அனிருத் வேல், நலன் கல்யாண், ஷ்ரவன் ராஜேஷ் ஆகிய ஏழு வீரர்கள் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினர்.