/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய பல்கலை ரோல்பால் போட்டி துவக்கம்
/
அகில இந்திய பல்கலை ரோல்பால் போட்டி துவக்கம்
ADDED : மே 15, 2024 09:46 PM

சென்னை:இந்திய பல்கலைகளின் கூட்டமைப்பு, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான, ரோல்பால் போட்டி நேற்று துவங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த மேலக்கோட்டையில் உள்ள விளையாட்டு பல்கலையில் போட்டிகள் நடக்கின்றன.
சென்னை மாவட்ட ரோல்பால் சங்கம் மற்றும் தமிழ்நாடு ரோல்பால் சங்கங்களின் தொழில்நுட்ப ஆதரவில் போட்டிகள் நடக்கின்றன. ஆண்களில் தமிழ்நாடு உடற்கல்வி பல்கலை, அமிட் பல்கலை, கேரளா பல்கலை, கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலை என, மாணவர்களில் 14 அணிகள், மாணவியரில் 12 அணிகள் என, மொத்தம் 24 அணிகள் பங்கேற்றுள்ளன.
போட்டிகள் முதலில் 'நாக் - அவுட்' முறையிலும், அதைத்தொடர்ந்து, 'லீக்' முறையிலும் நாளை வரை நடக்கின்றன. போட்டியை 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குனரும், சென்னை மாவட்ட ரோல்பால் சங்க தலைவருமான ஆர்.லட்சுமிபதி, தமிழ்நாடு உடற்கல்வி பல்கலை பதிவாளர் லில்லி புஷ்பம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையின் விளையாட்டுத்துறையின் செயலர் ராஜேஷ் குமார், செங்கல்பட்டு மாவட்ட ரோல்பால் சங்க தலைவர் அஸ்வின் மகாலிங்கம், செயலர் தணிகைவேல், சென்னை மாவட்ட சங்கத்தின் செயலர் ராணா, அமிட் பல்கலை உடற்கல்வி இயக்குனர் ராம்குமார், கிரசன்ட் பல்கலை உடற்கல்வி துறை தலைவர் மற்றும் இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.