/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகில இந்திய வாலிபால் சென்னை பல்கலை சாம்பியன்
/
அகில இந்திய வாலிபால் சென்னை பல்கலை சாம்பியன்
ADDED : ஜன 12, 2025 10:48 PM

சென்னை,:கேரளாவில் நடந்த அகில இந்திய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை பல்கலை அணி கோப்பையை வென்றது.
அகில இந்திய பல்கலை கூட்டமைப்பு ஆதரவுடன், பல்கலைகள் இடையிலான அகில இந்திய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலை மைதானத்தில், கடந்த 6ம் தேதி துவங்கி, 10ம் தேதி நிறைவடைந்தது.
இப்போட்டியில், இந்தியா முழுதும் மண்டல அளவில் வெற்றி பெற்ற, 16 அணிகள் பங்கேற்றன. அணிகள் நான்கு குழுவாக பிரிக்கப்பட்டு, 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. இதில், தமிழகத்தின் சென்னை பல்கலை அணி, 'லீக்' போட்டியில் பங்கேற்ற மூன்று போட்டிகளையும் வென்று, முதலிடம் பிடித்தது.
அடுத்த நடந்த காலிறுதி போட்டியில், புவனேஷ்வர், கலிங்கா பல்கலை அணியை, 22- - 25, 24- - 26, 25- - 18, 30- - 28, 15 - -7 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்ற சென்னை பல்கலை அணி, அடுத்து நடந்த அரையிறுதி ஆட்டத்தில், 19- - 25, 25- - 20, 26 - -24, 25- - 19 என்ற புள்ளிக் கணக்கில், ஹரியானா பல்கலை அணியை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில், கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலை அணியை எதிர்த்து களமிறங்கிய சென்னை பல்கலை அணி, 25- - 21, 25- - 20, 25 - -22 என்ற புள்ளிக் கணக்கில் நேர் செட்டில் வெற்றி பெற்று, 16 ஆண்டிற்குப்பின் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது.