/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல் மருத்துவ கல்லுாரிக்கு ரூ.64 கோடி ஒதுக்கீடு
/
பல் மருத்துவ கல்லுாரிக்கு ரூ.64 கோடி ஒதுக்கீடு
ADDED : அக் 22, 2024 12:17 AM
சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலை - முத்துசாமி சாலை சந்திப்பில், கோட்டை ரயில் நிலையம் எதிரே, சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இது, நாட்டின் மூன்றாவது பழமையான மருத்துவ கல்லுாரி.
தென்னிந்தியாவின் முதல் அரசு பல் மருத்துவக் கல்லுாரி. இங்கு தினமும், ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இட நெருக்கடி காரணமாக சிகிச்சை அளிப்பதிலும், மாணவர்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்வதிலும், சிரமம் ஏற்பட்டது.
இந்த மருத்துவமனை கட்டடம் விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்போதுள்ள மருத்துவமனை கட்டடத்தில், நான்கு மாடி கூடுதல் கட்டடங்கள் கட்ட, பொதுப்பணித் துறைக்கு 56.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய தளங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், 100 புதிய பல் மருத்துவ நாற்காலிகள் உள்ளிட்டவை வாங்க, 7.59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் முடிந்ததும், இங்குள்ள பல் கட்டும் துறை, வாய் வழி நோயியல், பொது சுகாதார பல் மருத்துவம், பல் ஈறு அறுவை சிகிச்சை துறை ஆகியவை மேம்படுத்தப்பட உள்ளது.