/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழி சாலையாக மாற்றம்
/
ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழி சாலையாக மாற்றம்
ADDED : ஆக 11, 2025 01:15 AM

சென்னை:ராயப்பேட்டை டி.டி.கே., சாலையில், ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலை வரை, சென்னை மாநகராட்சி சார்பில், பழுதடைந்த மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணி நடப்பதால், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
டி.டி.கே., சாலையில், ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல், ஸ்ரீமான் ஸ்ரீனிவாசா சாலை வரை, 230 மீட்டர் வரை, சென்னை மாநகராட்சி சார்பில், மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கும் பணி துவங்குகிறது.
இதையொட்டி, இன்று முதல், ஆழ்வார்பேட்டை மேம்பாலம் இருவழிச்சாலையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் மட்டும் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
டி.டி.கே., சாலையில் மியூசிக் அகாடமி நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், ஆழ்வார்பேட்டை மேம்பால அணுகு சாலையை பயன்படுத்தி, ஆழ்வார்பேட்டை சிக்னல் இடதுபுறம் திரும்பி, முர்ரேஸ் கேட் சாலை வழியாக சென்று, வலதுபுறம் திரும்பி சேஷாத்ரி சாலை மற்றும் கஸ்துாரி ரங்கன் சாலை வழியாக சென்று, இலக்கை அடையலாம்.
டி.டி.கே., சாலையில், மயிலாப்பூர் நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஆழ்வார்பேட்டை மேம்பால அணுகு சாலையை பயன்படுத்தி, ஆழ்வார்பேட்டை சிக்னலில் வலதுபுறம் திரும்பி, லஸ் சர்ச் சாலை மற்றும் முசிறி சுப்பிரமணியம் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, பி.எஸ்.சிவகாமி சாலை வழியாக சென்று, வழக்கம் போல தங்கள் இடைக்க அடையலாம்.
டி.டி.கே., சாலையில், ஆழ்வார்பேட்டை நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள், கனரக வாகனங்கள், ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திற்கு பதிலாக, அணுகு சாலையை பயன்படுத்தி தங்கள் இலங்கை அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.