sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாம்பரத்தில் பிரமிக்க வைத்த போர் விமானங்கள்

/

தாம்பரத்தில் பிரமிக்க வைத்த போர் விமானங்கள்

தாம்பரத்தில் பிரமிக்க வைத்த போர் விமானங்கள்

தாம்பரத்தில் பிரமிக்க வைத்த போர் விமானங்கள்


ADDED : அக் 05, 2024 11:57 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,இந்திய விமானப்படை நிறுவன தினம் அக்., 8ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் பல்வேறு விமானப்படை நிலையங்களில், அணிவகுப்பு ஏற்பாடு தயாராகி வருகிறது.

முதல் முறையாக தமிழகத்தில், பிரமாண்ட 'ஏர் ேஷா' இன்று காலை சென்னை, மெரினாவில் நடக்கிறது. தாம்பரம் விமானப்படை தளத்தில் வரும் 8ம் தேதி விமானப்படை தின சிறப்பு அணிவகுப்பு நடக்கிறது. இதற்கான ஒத்திகையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதில், விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது. விமானப்படையின் இசைக் குழுவினர் 50 பேர் இணைந்து, பாரம்பரிய இசையை வாசித்தனர்.

வீரர்கள், தங்களது இடது கையில் இருந்த துப்பாக்கியை சுழற்றி, வலது கைக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் மாற்றுவது போன்ற சாகசங்களை செய்தனர். பின், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகசம் நடந்தது.

'சூர்யகிரண் ஏரோபாட்டிக்' அணியினர், விமானத்தில் இருந்து வான் நோக்கி பறப்பதும், திடீரென ஒன்றோடு ஒன்று நெருக்கமாக வருவதும் போன்றவற்றை செய்து அசத்தினர். 'சாரங்' ஹெலிகாப்டர் குழுவினர், மிக அருகில் வந்து, பறப்பது போன்ற அணிவகுப்பில் ஈடுபட்டனர்.

'சுகாய்' விமானம், மேல் நோக்கி சென்று, திடீரென பல்டி அடித்து, கீழ் நோக்கி வந்து திரும்ப சர்ரென வானில் பறந்தது, அட்டகாசமாக இருந்தது. மறுபுறம், நம் நாட்டிலே தயாரிக்கப்பட்ட அதிநவீன இலகு ரக விமானம் தேஜஸ், போர் ஹெலிகாப்டர் பிரசாந்த், ரபேல் போன்ற விமானங்கள், வானில் பறந்து வர்ணஜாலம் காட்டின.

விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் ஹெச்.டி.டி., 40 பயிற்சி விமானத்தை, இரு விமானிகள் வட்டமடித்து காண்பித்தது, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

விமானப்படையின் பலத்தை எடுத்து கூறும் வகையில் ரோகினி ரேடார், போர் ஹெலிகாப்டர்கள், பயிற்சி விமானங்களின் கண்காட்சியும் நடந்தது.






      Dinamalar
      Follow us