/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள்
/
மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்பாள்
ADDED : அக் 05, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, 'சக்தி கொலு' எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இரண்டாம் நாளான நேற்று மாலை 'சக்தி' கொலுவில் அம்பாள் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை லலிதா சகஸ்ரநாம, வேத பாராயணம் நடந்தது. மகளிர் குழுவினர் கொலு பாட்டு பாடப்பட்டது.
நேற்று மாலை லாஸ்யா நடன நிறுவன மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, பேபி திவ்யாவின் பக்திப்பாடல் கச்சேரி நடந்தது. பக்தர்களுக்கு, அம்மன், முருகன், நுால், விபூதி, குங்குமம், அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பை வழங்கப்பட்டது.