/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்பேத்கர் மணி மண்டபத்தை காலை 7:30 மணிக்கு திறக்க உத்தரவு
/
அம்பேத்கர் மணி மண்டபத்தை காலை 7:30 மணிக்கு திறக்க உத்தரவு
அம்பேத்கர் மணி மண்டபத்தை காலை 7:30 மணிக்கு திறக்க உத்தரவு
அம்பேத்கர் மணி மண்டபத்தை காலை 7:30 மணிக்கு திறக்க உத்தரவு
ADDED : ஏப் 10, 2025 11:50 PM
சென்னை, அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 14ம் தேதி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தை, காலை 7:30 மணி முதல் மக்கள் மரியாதை செலுத்த திறக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள், வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்துக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், பொது மக்கள் மரியாதை செலுத்துவர்.
கடந்த ஆண்டுகளில், கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டதை குறிப்பிட்டு, நடப்பாண்டு அதிகாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, மணி மண்டபத்துக்கு, பொது மக்களை அனுமதிக்க உத்தரவிடக்கோரி, சட்டக் கல்லுாரி மாணவி அன்பரசி உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில்,'நடப்பாண்டு அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, மணி மண்டபத்தை திறந்து வைக்க அரசு முடிவு செய்துள்ளது. மணி மண்டபத்துக்கு வருவோர் அமர, போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பிட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன' என, தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, 'மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை தருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அம்பேத்கர் மணி மண்டபத்தை, தமிழக அரசு காலை 7:30 மணி முதல் திறக்க வேண்டும்.
'அம்பேத்கர் பிறந்த நாளை அர்த்தமுள்ளதாகவும், அமைதியாகவும் கொண்டாடப்படுவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு மற்றும் காவல்துறை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.