/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஏர்போர்ட்டில் அமெரிக்க பயணி ரகளை
/
சென்னை ஏர்போர்ட்டில் அமெரிக்க பயணி ரகளை
ADDED : ஆக 25, 2025 01:29 AM
சென்னை; சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில், ஊழியர்கள் மட்டும் செல்வதற்காக ஐந்தாவது நுழைவாயில் உள்ளது.
நேற்று முன்தினம், வெளிநாட்டைச் சேர்ந்த 40 வயது ஆண் பயணி, ஐந்தாவது நுழைவாயில் வழியே உள்ளே செல்ல முயன்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரரை தாக்கியுள்ளார்.
இதையடுத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், அந்த பயணியை பிடித்து, விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த நபர், அமெரிக்காவைச் சேர்ந்த டைட்டஸ் லிவி, 43, என்பதும், அவர் அங்கிருந்து கத்தார் தலைநகர் தோஹா வழியே சென்னை வந்ததும் தெரிந்தது.
மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு சுற்றுலா சென்று திரும்பிய டைட்டஸ் லிவி, சென்னையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி வந்துள்ளார்.
போதைக்கு அடிமையான இவர், விமான டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை தவறவிட்டதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மது போதையில் இருந்த அவரை, போலீசார் மீட்டு ராஜிவ் அரசு மருத்துவமனையில் சேர்த்து, உரிய சான்று பெற்ற பின், மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து, சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்துக்கு, போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.