/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'அமிட்டி பிரிமியர் லீக்' தடகளம் எம்.ஓ.பி., வைஷ்ணவா 'சாம்பியன்'
/
'அமிட்டி பிரிமியர் லீக்' தடகளம் எம்.ஓ.பி., வைஷ்ணவா 'சாம்பியன்'
'அமிட்டி பிரிமியர் லீக்' தடகளம் எம்.ஓ.பி., வைஷ்ணவா 'சாம்பியன்'
'அமிட்டி பிரிமியர் லீக்' தடகளம் எம்.ஓ.பி., வைஷ்ணவா 'சாம்பியன்'
ADDED : நவ 21, 2024 11:58 PM

சென்னை, 'அமிட்டி பிரிமியர் லீக்' விளையாட்டில், தடகளம் மற்றும் கூடைப்பந்து போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
அமிட்டி குளோபல் பிஸ்சனஸ் பள்ளி சார்பில், அமிட்டி பிரிமியர் லீக் - 2024 விளையாட்டு போட்டிகள், சென்னை நேரு விளையாட்டு அரங்கில், இரண்டு நாட்கள் நடந்தன. இதில், கல்லுாரிகளுக்கு இடையிலான தடகளம் மற்றும் கூடைப்பந்து போட்டிகளில், சென்னையில் பல்வேறு கல்லுாரி அணிகள் மோதின.
மகளிர் கல்லுாரிகளுக்கான தடகளப் போட்டியில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி மாணவியர், 11 தங்கம், ஐந்து வெள்ளி, மூன்று வெண்கல பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றனர்.
கூடைப்பந்தில் இறுதிப் போட்டி வரை முன்னேரிய எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி அணி, எஸ்.ஆர்.எம்., பல்கலையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான ஆட்ட முடிவில், 68 - 48 என்ற கணக்கில், எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லுாரி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. எத்திராஜ் கல்லுாரி அணி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.