/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாட்டு இறைச்சி கடைகளால் அம்மன் கோவில் பக்தர்கள் அவதி
/
மாட்டு இறைச்சி கடைகளால் அம்மன் கோவில் பக்தர்கள் அவதி
மாட்டு இறைச்சி கடைகளால் அம்மன் கோவில் பக்தர்கள் அவதி
மாட்டு இறைச்சி கடைகளால் அம்மன் கோவில் பக்தர்கள் அவதி
ADDED : மார் 16, 2025 10:02 PM
குன்றத்துார்:சென்னை அருகே மாங்காடு நகராட்சியில் மாங்காடில் இருந்து மவுலிவாக்கம் செல்லும் சாலையில், பட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலையின் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி கடைகள் உள்ளன.
இந்த கடைகளில், மாட்டு இறைச்சி வெட்ட வெளியில் தொங்க விட்டு விற்பனை செய்கின்றனர். இது, இந்த வழியே மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது.
இது குறித்து, பட்டூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பழனி கூறியதாவது:
மாட்டு இறைச்சியால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்த பகுதியை கடந்து செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். மாங்காடு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பலர், இந்த வழியே செல்வதை தவிர்த்து, மாற்று வழியில் கோவிலுக்கு செல்கின்றனர்.
அதேபோல, இறைச்சி கடைகளுக்கு வரும் வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, மாட்டு இறைச்சி கடை விற்பனையை ஒழுங்குப்படுத்தி அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.