/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அம்மன் கோவிலுக்கு பூட்டு சமரச பேச்சு தோல்வி
/
அம்மன் கோவிலுக்கு பூட்டு சமரச பேச்சு தோல்வி
ADDED : ஜன 28, 2025 12:30 AM

உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் கடல்மங்கலம் கிராமத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சொந்தம் கொண்டாடி, நான்கு ஆண்டுகளாக சிலர் பூட்டி வைத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த கிராமவாசிகள், பூட்டிக் கிடந்த கோவிலை திறந்து வழிபாடு செய்தனர்.
இதையறிந்த எதிர்தரப்பினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கைகலப்பாக மாறியது. உத்திரமேரூர் போலீசார், வருவாய்த் துறையினர் அவர்களிடம் பேச்சு நடத்தினர்.
தொடர்ந்து, உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் தேன்மொழி தலைமையில், நேற்று காலை இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தப்பட்டது.
இதில் எதிர்தரப்பு ஒத்துழைப்பு வழங்காததால், பேச்சு தோல்வியில் முடிந்தது.
கிராமவாசிகள் கூறுகையில், 'ஊருக்கு சொந்தமான பொதுக்கோவிலை சிலர் உரிமை கொண்டாடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னையில் தலையிட்டு, உரிய தீர்வு காண வேண்டும்' என்றனர்.

