/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பின்றி நாசமாகும் அம்மன் கோவில் குளம்
/
பராமரிப்பின்றி நாசமாகும் அம்மன் கோவில் குளம்
ADDED : ஆக 11, 2025 01:35 AM

ராயபுரம்:ராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் குளம், பராமரிப்பின்றி நாசமாவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
ராயபுரத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பொங்கல், நவராத்திரி மற்றும் தீபாவளி நாட்களில், இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதேநேரம் சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் குளம், பராமரிப்பின்றி பாசி படர்ந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
குளத்தை முறையாக துார் வாரி பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ''கோவில் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும், பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட பொருட்கள் குளத்தில் விடப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தை சீரமைப்பற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றனர்.