ADDED : ஆக 16, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
துரைப்பாக்கம்: கந்தன்சாவடி, பெருங்குடியில் உள்ள அம்மன் கோவில்களில், உண்டியல் உடைத்து திருடிய நபர் சிக்கினார்.
கந்தன்சாவடி, சோழன் நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 12ம் தேதி நள்ளிரவு, கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது.
அதேநாள், பெருங்குடி, பஞ்சாயத்து சாலையில் உள்ள நாகாத்தம்மன் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டது.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக, துரைப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், குரோம்பேட்டையைச் சேர்ந்த ஹானஸ்ட் ராஜ், 39 என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர், அம்பத்துாரில் இருந்து ஒரு இருசக்கர வாகனம் திருடி சென்று, இரண்டு கோவில்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருடியது தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
