/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போரூர் ஏரியில் கட்டட கழிவு ஆக்கிரமிக்க முயற்சியா?
/
போரூர் ஏரியில் கட்டட கழிவு ஆக்கிரமிக்க முயற்சியா?
ADDED : செப் 23, 2024 02:46 AM

போரூர்:சென்னை, போரூர் ஏரியின் ஒரு பகுதியை, மீண்டும் கட்டட இடிபாடுகளை கொட்டி மூடி, ஆக்கிரமிக்க முயல்வதாக புகார் எழுந்துள்ளது.
சென்னைக்கு மிக அருகில், போரூர் ஏரி அமைந்துள்ளது. போரூர் ஏரியின் -பரப்பளவு, 800 ஏக்கர் எனக் கூறப்பட்டாலும், 330 ஏக்கருக்கு மட்டுமே, வருவாய் துறை ஆவண சான்றுகள் காட்டப்படுகின்றன.
போரூர் ஏரி பகுதியில் வடக்கு, மேற்கு பகுதிகளில், வெளியில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் கொட்டப்பட்டு, ஏரியை துார்க்கும் பணி நடந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழில், கடந்த 2013ம் ஆண்டு படத்துடன் கூடிய விரிவான செய்திகள் அடுத்தடுத்து வெளியாகின.
தற்போது, அய்யப்பன்தாங்கல் ஊராட்சி அம்மன் கோவில் தெருவில், போரூர் ஏரி அருகே கட்டட கழிவுகள் குவிக்கப்பட்டு உள்ளன.
இதனால், போரூர் ஏரியில் கட்டட கழிவுகள் கொட்டி துார்க்கும் முயற்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, ஏரியில் மண் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.