/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒத்திகைக்கு வந்த தீயணைப்பு வாகனம் மோதி முதியவர் பலி
/
ஒத்திகைக்கு வந்த தீயணைப்பு வாகனம் மோதி முதியவர் பலி
ஒத்திகைக்கு வந்த தீயணைப்பு வாகனம் மோதி முதியவர் பலி
ஒத்திகைக்கு வந்த தீயணைப்பு வாகனம் மோதி முதியவர் பலி
ADDED : பிப் 18, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணலி, ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்தவர் சுப்பாராவ், 72; லாரி கிளீனர். நேற்று முன்தினம் மாலை, மணலி, மாதவரம் - 200 அடி சாலையில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில், பொருட்கள் ஏற்றிச் செல்ல வந்தார்.
அப்போது, தொழிற்சாலை கதவின் முன் ஆவணங்களுடன் நடந்து சென்றபோது, ஒத்திகை நிகழ்ச்சிக்காக வந்த மணலி தீயணைப்பு துறை வாகனம், அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த்த சுப்பாராவ் ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.