/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பாலத்தின் சிமென்ட் தடுப்புக்கு இடையே சிக்கிய முதியவரின் கால்
/
மேம்பாலத்தின் சிமென்ட் தடுப்புக்கு இடையே சிக்கிய முதியவரின் கால்
மேம்பாலத்தின் சிமென்ட் தடுப்புக்கு இடையே சிக்கிய முதியவரின் கால்
மேம்பாலத்தின் சிமென்ட் தடுப்புக்கு இடையே சிக்கிய முதியவரின் கால்
ADDED : அக் 30, 2025 03:54 AM

கொரட்டூர்: அம்பத்துார், அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், 82. இவர், உறவினர் வீட்டிற்கு செல்ல, நேற்று கொரட்டூர் வந்துள்ளார். அப்போது, அருகில் உள்ள கருக்கு மேம்பாலத்தின் படிகட்டுகள் வழியாக, மேம்பாலத்தில் ஏறியுள்ளார்.
மேம்பாலத்தின் மறுபக்கத்திற்கு செல்ல, அங்கிருந்த சிமென்ட் தடுப்பை தாண்ட முயற்சித்த போது, முதியவர் சண்முகத்தின் வலது கால், இரண்டு சிமென்ட் தடுப்புகளுக்கு இடையே சிக்கியது.
இதனால் நிலை தடுமாறிய முதியவர் சண்முகம், சாலையில் விழுந்துள்ளார். அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், முதியவரை ஆசுவாசப்படுத்தி, அருகில் உள்ள அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்படி, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 15 நிமிடம் போராடி, சிமென்ட் தடுப்புகளை உடைத்து, முதியவரை பத்திரமாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.