/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேருந்தில் முதியவர் திடீர் உயிரிழப்பு
/
பேருந்தில் முதியவர் திடீர் உயிரிழப்பு
ADDED : அக் 02, 2024 12:53 AM
ஓட்டேரி, கொரட்டூர் - பிராட்வே செல்லும் தடம் எண்: 35 மாநகர பேருந்தில், நேற்று மதியம் 12:00 மணியளவில் இருந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், அயனாவரம் சயானி பேருந்து நிறுத்தத்தில் ஏறியுள்ளார்.
பிராட்வே செல்வதற்காக டிக்கெட் எடுத்து, 'சீட்'டில் அமர்ந்துள்ளார். பேருந்து, ஓட்டேரி மேம்பாலம் அருகே சென்ற போது, முதியவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதையடுத்து பேருந்தை ஓட்டேரி காவல் நிலையம் அருகே நிறுத்தி, முதியவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளனர்.
இதில், அவர் இறந்தது தெரிய வந்தது. உடலை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர். முதியவர் மாநிறத்தோடு, இளம் சிவப்பு நிற கோடு போட்ட சட்டையும், கறுப்பு நிற பேண்டும் அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

