/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தார்பூசி அழிக்க முடியாது அன்புமணி கண்டனம்
/
தார்பூசி அழிக்க முடியாது அன்புமணி கண்டனம்
ADDED : மார் 07, 2026 04:57 AM
சென்னை: 'சென்னை மத்திய கைலாஷ், 'எல்' வடிவ மேம்பாலம் கட்டுவதில் நடந்த முறைகேட்டை தார்பூசி அழிக்க முடியாது' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில், 'எல்' வடிவ மேம்பாலம் தரமற்றும், பலவீனமாகவும், அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கட்டப் பட்டுள்ளது.
இதை மறைக்க, மேம்பாலத்தின் மீது அவசரமாக தார்ச்சாலை அமைத்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி, தி.மு.க., தான்.
'எல்' வடிவ மேம்பாலத்தின் குறைபாடுகள் குறித்து, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு நடத்த வேண்டும்.
தரமற்ற முறையில் பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரரை, உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இவற்றைச் செய்யாமல், தார்பூசி அழிப்பதால் ஊழலை மறைக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

